மேகமலைப் பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு மத்திய அரசை தேனி தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், இயற்கை எழில் கொஞ்சும் மேகமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாகக் குறிப்பிட்டார்.
ஏலக்காய், தேயிலைத் தோட்டங்கள் இருப்பதாகவும், கேரள எல்லையை ஒட்டி 636 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ் மேகமலை பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும், அங்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம் உலகளவில் பிரபலமாகும் என்றும் ரவீந்திரநாத் தெரிவித்தார்.