<no title>வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் ஓரிரு தினங்களில் வர வாய்ப்பு - அமைச்சர் காமராஜ்


துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் ஓரிரு தினங்களில் வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வந்திருந்த அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இதனைத் தெரிவித்தார்.