செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்து இருவர் காயமடைந்தது தொடர்பாக மேற்கொண்ட சோதனையில், குவியல் குவியல் குவியலாக வெடிபொருட்கள் சிக்கியுள்ளன.
அனுமந்தபுரம் இந்திரா நகர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வானத்தில் வந்து கொண்டிருந்தபோது பலத்த சப்தம் கேட்டுள்ளது. இதில் ராமகிருஷ்ணன் உடன் சாலையில் நின்றிருந்த ஒரு மூதாட்டியும் காயமடைந்தார். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் குண்டு துளைத்தது போன்று காணப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார். விசாரணையில் எழுந்த சந்தேகத்தின் பேரில் செங்கல்பட்டு மருதம் ஆய்வுக்குழு அதிகாரி ஜெயராமன் தலைமையிலான குழு, ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டது. அப்போது அவரது வீட்டில் வெடித்தும், வெடிக்காத நிலையிலும் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் மற்றும் கையெறி குண்டுகள் சிக்கியுள்ளது.