சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி இன்று நடை திறக்கப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.