தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நெல்லை மாவட்டம்  நெல்லையப்பர் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மஹா ருத்ர தீபமான சொக்கப்பனை  ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது .இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.


கும்பகோணம் அருகே முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா மற்றும் சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வரும் காட்சிகள் சிறப்புடன் நடைபெற்றன.


கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் 2ஆயிரத்து 019 ஆம் ஆண்டின் கார்த்திகை தீபம் திருவிழாவை முன்னிட்டு  2ஆயிரத்து 019 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதனை அடுத்து தீப ஒளியில் மிளிர்ந்த  கோயிலை பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டனர்.கன்னியாகுமரியில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


கன்னியாகுமரியில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


இதுபோல தாராபுரம், மூணாறு, போடி,காரைக்குடி, சேலம்,ஏற்காடு,புதுக்கோட்டை, உசிலம்பட்டி,திண்டுக்கல், அறந்தாங்கி, ராஜபாளையம், வந்தவாசி, தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களிலும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.