ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா...
நெல்லை :
நெல்லை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணமான பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மணக்காடு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் வழங்கினார். விழாவில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.டி.ஏ.குமார், மாவட்ட கௌரவச் செயலாளர் பானுசேகர், விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி செயலாளர் ராமநாதன், தகவல் பிரிவு செயலாளர் கோமதிசங்கர், மீனவரணி செயலாளர் ஆல்டிரின் மகளிர் அணி சுமுத்ரா லெட்சுமி, எம்எம்.துரை, குமரகுரு, கண்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.