மனிதர்களின் முகங்களை போன்ற தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் மாஸ்கோவை சேர்ந்த டாட்டியானா ராஸ்டோர்குவா என்ற பெண், தான் வளர்த்து வரும் மெய்ன் கூன் வகை பூனைகளின் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
பூனைகள் குறித்த ஆராய்ச்சியாளரும், விலங்குகள் நல ஆர்வலருமான அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்கலப்பின் மூலம் உருவானவை என்பதால் இந்த பூனைகளின் முகங்கள், மனித முகங்களை போல் தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இவர் வளர்த்து வரும் பூனைகளில் வால்கெய்ரி என்ற பூனை இன்டர்நெட் ஸ்டாராக உள்ளது. இந்நிலையில் பூனைகள் வளர்ப்பது பற்றி கூறியுள்ள டாட்டியானா, தாம் விலங்குகளை மிகவும் நேசிப்பதாகவும், பூனைகள் எப்போதும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறினார்.
கடந்த 2002ம் ஆண்டு முதல் தொழில் ரீதியாக பூனைகளை வளர்க்கத் தொடங்கினேன். 2004 முதல் மைனே கூன்ஸுடன் நான் நேரடியாகப் பணியாற்றி வருகிறேன் என கூறியுள்ளார்.