மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  மொத்தம் உள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 பதவிகளுக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


திருச்சி, திருநெல்வேலி,நாகர்கோவில், திண்டுக்கல்,மதுரை,கோவை ,ஈரோடு  ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பொதுப் பாலினத்திற்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.