திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாசிலை முன்பு ஆதிதமிழர் பேரவையின் சார்பில் மாவட்டச்செயலாளர் பொன்ராஜேந்திரன் தலைமையில் பெரியாரை பற்றி அவதூறு பேசிய ரஜினிகாந்தை கண்டித்தும் ரஜினிகாந்த் உடனடியாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் காவல்துறையினர்அனுமதி மறுக்கப்பட்டும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில நிர்வாகிகள்பெரியார்தாசன் வழக்கறிஞர் செயலாளர் பொன். செல்வம் மாநில கலை இலக்கிய துணை செயலாளர் ஈழவேந்தன் மாநில இளைஞரணி துணை செயலாளர்
மு. சரவணன் மாவட்ட அமைப்பு செயலாளர்பழ. செயராசு நகர செயலாளர்மூலனூர் ஒண்டிவீரன்மாவட்ட இளைஞரணிசெயலாளர் வெள்ளிமலைஉடுமலைநகர செயலாளர்சதீஷ்குமார்வெள்ளகோவில்ஒன்றிய செயலாளர்ராஜசேகர் குண்டட ஒன்றியசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்தை கண்டித்து ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்...