முன்னாள் நீதிபதிகள் பேரணி: ஐகோர்ட் அதிருப்தி......

       


 



              சென்னை ஐகோர்ட் வளாகத்தில், முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியதற்கு சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது


            சென்னை ஐகோர்ட்டில் சிஐஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தக்கோரும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி கூறுகையில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது. முன்னாள் நீதிபதிகள் ஹரி பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணியில் பங்கேற்றது வேதனை அளிக்கிறது. முன்னாள் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றது கோர்ட் மாண்பை கெடுப்பதாக உள்ளது. பிரச்னை எழுந்திருந்தால், யார் மீது வழக்குப்பதிவு செய்வது. கோர்ட் பொது சொத்து. தனி நபர்களுடையது அல்ல என்பதை உணர்ந்து முன்னாள் நீதிபதிகள் செயல்பட வேண்டும்.