களி மண்ணில் விளையும் காய்கறி

                                                 குளிர் பிரதேசங்களில் விளையும் காய்கறி சாகுபடி, நம்மூர் மண்ணில் விளைவது குறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.மத்தியாஸ் கூறியதாவது:பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பகுதியில், மக்கும், மக்காத குப்பையை தரம் பிரிக்கிறோம்.மக்கும் குப்பையில், இயற்கை உரம் தயாரிப்பதில், பேரூராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.காலியாக இருக்கும் நிலத்தில், வெண்டை, வாழை, கத்திரி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல வித வருவாய் தரும் பணப்பயிர்களை பயிரிடுகிறோம்; விற்பனையும் செய்கிறோம்.அந்த வரிசையில், நடப்பாண்டு கேரட், பீட்ரூட் ஆகிய, குளிர் பிரதேசங்களில் விளையும் காய்கறி பயிரை பயிரிட்டுள்ளோம். செடிகள், நன்றாக வளர்ந்துள்ளன. குறிப்பாக, களி மண்ணிலும் இவை விளைவது ஆச்சரியமாக இருக்கிறது.ரசாயன உரங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, இயற்கை உரம் போடப்படுகிறது. மகசூலுக்கு பின் தான், வருவாய் தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.