சென்னை:
மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை பெற்றுக் கொள்கிறார்கள்.

பொதுமக்கள் நலன் கருதி, மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற வகையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப் மிஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மாநகர போக்குவரத்து கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.