'முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக, சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா' என, ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது; அரசியலில் இருந்து விலகத் தயாரா என, சவால் விட்டதெல்லாம், வழக்கம் போல வெற்றுச் சவாடல் தானா?.
அரசியல் உலகில், எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும், சிறந்த பல்டி, முரசொலி நிலம் மீதான பழியை துடைப்போம் என, வீரவசனம் பேசி விட்டு, இப்போது, நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என, சரண் அடைந்தது தான்.