பிப்.1 ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பல்கலை., மானியகுழு கமிஷன் சேர்மன் டி.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தை மேம்படுத்த யூ.சி.ஜி., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுதந்திரம் பெற்றது முதல் உயர் கல்வி பன் மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 993 பல்கலைகழகங்கள், 3. 7 கோடி மாணவர்கள், 14 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.சமூகம் மற்றும் தேசிய தேவைகளுக்கு உயர்கல்வியை பொருத்தமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை யூ.சி.ஜி., மேற்கொண்டு வருகிறது . உயர்கல்வி மேம்படுத்த இன்னும் நாம் பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. வரும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இது வரும் காலத்தில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: டி.பி.சிங்.