ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் இன்று (ஜன.,29)இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற உள்ளது
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் கடந்த வாரம் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.,க்களில் 560 பேரால் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இந்த தீர்மானங்கள் மீது இன்று (ஜன.,29) விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த தீர்மானங்கள் மீது நாளை (ஜன.,30) ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் கடந்த வாரம் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.,க்களில் 560 பேரால் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இந்த தீர்மானங்கள் மீது இன்று (ஜன.,29) விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த தீர்மானங்கள் மீது நாளை (ஜன.,30) ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. போராட்டங்களின் போது மனிதஉரிமை மீறல் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சிஏஏ, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப் போட்ட போதிலும் அதனை ஏற்க மறுத்துள்ள ஐரோப்பிய யூனியன் பார்லி., இன்று விவாதம் நடத்த உள்ளது.