சிவகங்கை அருகே மனைவியை காணவில்லை என கணவன் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிவகங்கை நகரை அடுத்துள்ளது இந்திரா நகர். இந்த ஊரைச் சேர்ந்தவர் அப்பாஸ் (32). இவர் தனது 32 வயதுடைய (பெயரை குறிப்பிடவில்லை) மனைவியை கடந்த 10.01.2020 முதல் காணவில்லை என சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரை வழக்கு பதிவு செய்து போலீசார் அப்பாசின் மனைவியை தீவரமாக தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ரேக்ளா ரேஸ் நடத்திய 7 பேர் மீது வழக்குசிவகங்கை, ஜன-19சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா இ.வலயப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் இராமசந்திரன். இவர் அரளிக்கோட்டையில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடத்தியுள்ளார். இதனால் வடமாவடி கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் போலீசார் இராமசந்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதே போல் காரைக்குடியை அடுத்துள்ள மானகிரியில் தடையை மீறி சூசைமுத்து மகன் இருதயராஜ் (54) மற்றும் 5 பேர் சேர்ந்து ரேக்ளா ரேஸ் நடத்தியுள்ளனர். இந்த ரேஸ் போட்டியை அனுமதியில்லாமல் நடத்தியதால் நாச்சியார்புரம் போலீசார் இருதயராஜ் மற்றும் 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்மானாமதுரை அருகேஒரு சமூதாய தலைவரின் படத்தை அவமதித்ததாக 4 பேர் மீது வழக்கசிவகங்கை, ஜன-1சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ளது அரசகுளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சங்கரலிங்கம் (41). இவர் தனது ஊரில் நடந்த ஒரு விழாவில் ஒரு சமுதாய தலைவரின் படம் அடங்கிய டிஜிட்டல் போர்டை வைத்துள்ளார். இந்த படத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் அவமதிப்பு செய்ததாக சங்கரலிங்கம் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசகுளத்தை சேர்ந்த காந்தி, சதீஸ்குமார், தாமரைக்கண்ணன் மற்றும் பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனைவியை காணவில்லை கணவன் போலீசில் புகார் சிவகங்கை