வண்ணாரப்பேட்டை ஜன 30,
சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரால், பொதுமக்கள் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளனர்.ராயபுரம் மண்டலம், வார்டு 51, பழைய வண்ணாரப்பேட்டை, செல்வ விநாயகர் கோவில் தெருவில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக, கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.