கருணாநிதியை விட சிறப்பாக ஸ்டாலின் கட்சி நடத்துகிறார் - T.R.பாலு


    கருணாநிதியை விட பத்து மடங்கு சிறப்பாக ஸ்டாலின் கட்சி நடத்துவதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.  கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் தாமதம் செய்யப்படுவதாக, மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்  அவர் இவ்வாறு கூறினார். பல இடங்களில் தேர்தல் முடிவுகள் தவறாக அறிவிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு, மாநிலத் தேர்தல் ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் கூறினார்.