மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்


சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் பணிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபை கூடியது.


இந்நிலையில், மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த மசோதா இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும்.


உள்ளாட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


இன்று தாக்கல் செய்யப்படும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. நேற்று ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, அமமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.