போராட்டம் என்ற பெயரில் நடந்த வன்முறைகளால் ஜனநாயகம் வலுவிழந்துள்ளது என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பார்லி., கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது, இந்த தாசாப்தம் இந்திய வளர்ச்சி, காந்தி மற்றும் நேருவின் கனவுகளை நிறைவேறுவதற்கு முக்கியமானது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு அரசியல்சாசனம்வழிகாட்டுகிறது. கடந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை கூட்டத்தொடர் என்றே சொல்லலாம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. மத்திய அரசு ஏழைகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அயோத்தி தீர்ப்பை மக்கள் முழு மனதுடன் ஏற்றுள்ளனர்.