குடியரசு தினம் : தமிழக கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து

சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாட்டின் 71 வது குடியரசு தின விழா நாளை (ஜன.,26) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திட உறுதி கொள்வோம்.நம் வாழ்வின் மூச்சு, செயலை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையை கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறி செல்ல முன்வருவோம். அரசியலமைப்பு உருவாக பங்களித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகளை நினைவு கூர்வோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.