திருத்தணி பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முத்தரையர் மக்களின் நம்பிக்கையாய் விளங்கும் தென்னிந்திய முத்தரையர் சங்கத்தின் அரசியல் கட்சியான தேசிய நீதி கட்சி முத்தரையர் இன மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று சிறப்பாகசெயல்பட்டு வருகிறது இந்த தேசிய நீதிக்கட்சி முத்தரையர் இன மக்களின் உரிமை குரலாக விளங்கி வருகின்றது இந்தக் கட்சியின் நிறுவன தலைவரான வழக்கறிஞர் கமலநாதன் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் தங்கள் சங்கத்தையும் தங்களுடைய கட்சியையும் பலப்படுத்த பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இவரின் சிறந்த செயல்பட்டால் முத்தரையர் மக்கள் இவர் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கை வைத்துள்ளனர் இதனால் இவர் இந்த மாவட்டங்களில் முத்தரையர் இனமக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகின்றார்இவரின் இந்த செயல்பாட்டால் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வழக்கறிஞர் கமலநாதன் திருத்தணி பகுதியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் இவரின் வாக்குகளால் மாவட்ட கவுன்சிலர் பதவியை பெற திமுக அதிமுக கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது மூன்றாவது கட்சியாக தென்னிந்திய முத்தரையர் சங்கம் இத்தேர்தலில் தன்னுடைய பலத்தை நிரூபித்தது மேலும் சில பஞ்சாயத்து தலைவர் ஊராட்சி ஒன்றியக் உறுப்பினர் வார்டு உறுப்பினர் என பல இடங்களில் தேசிய நீதி நீதி கட்சியின் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதையடுத்து அரசியலில் தங்களை கண்டுகொள்ளாத அதிமுக திமுக கட்சிக்கு எதிராக வரும் சட்டமன்ற தேர்தலில் வழக்கறிஞர் கமலநாதன் தலைமையிலான தேசிய நீதி கட்சி பல இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் இனமக்களின் கட்சியான தேசிய நீதி கட்சி தங்களின் பலத்தை நிரூபிக்க தங்கள் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது இதனால் வரும் சட்டமன்றதேர்தல் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு முத்தரையர் சமுதாய வாக்குகள் பெற கடும் நெருக்கடி ஏற்படும் நிலையே உள்ளது எனவே தென்னிந்திய முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய நீதி கட்சியின் செல்வாக்கு என்ன என்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் தெரியும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர், இவரின் கட்சிக்கு முத்தரையர் சமுதாயத்தினர் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது வரும் சட்டமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.
முத்தரையர் கட்சியால் அதிமுக திமுக கலக்கம் .