நெல்லைகாவல் துறை ஆணையாளரிடம் மனு







தச்சநல்லூர் மேலக்கரையில் பொங்கல் அன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்குள்ள அங்கன்வாடி பள்ளி அருகில் பொங்கல் விழாவுக்கு அமைக்கப்பட்ட மேடை அருகே வந்து எங்களது தலைவர் அனுமதி இல்லாமல் பொங்கல் விழா நடத்தக் கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்து  ஒலிபெருக்கிகளை சேதப்படுத்தினர். இதற்கு ஊர் மக்கள் எதிரிப்பு தெரிவித்ததை தொடர்ந்து பொங்கல் விழா நடத்துபவர்களை மிரட்டிச் சென்றுள்ளனர்.மேலும் பொங்கல் விழா குழுவினரை தாக்கியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்திலும் ஊர் பொது மக்கள் மனு அளித்துள்ளனர்.