மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு உடற்தகுதி சான்று பெறும் பணிகளில் காளை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
பொங்கலையொட்டி நடைபெறவுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், உரிய மருத்துவ தகுதி சான்றிதழ் பெறப்பட்ட காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், அதற்கான சான்றிதழ் பெறும் பணிகள் சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில், காளை உரிமையாளர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு காளைகளைகொண்டு சென்று சோதனை செய்துவருகின்றனர். காளையின் உயரம், பல் எண்ணிக்கை, காளையின் வயது, கண் பார்வை உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு உரிய தகுதி சான்றிதழை பெற்றுச்செல்கின்றனர்.