தேர்தல் விதிமுறை மீறல்; மோடி மீது காங்., குற்றச்சாட்டு

         புதுடில்லி: தேசிய மாணவர் படை பேரணியில் பேசிய பிரதமர் மோடி தேர்தல் விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


'பிரதமர் நரேந்திர மோடி என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படையினர் முன்னிலையில் நேற்று முன் தினம் உரையாற்றினார். 'டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று கொண்டிருக்கையில் மாணவர்கள் முன்னிலையில் பிரதமர் அரசியல் பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது' என காங்., மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'தேர்தல் கமிஷன் இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்; தேர்தல் கமிஷனின் நடுநிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது' எனக்கூறினார்.