வாக்காளர் சிறப்பு முகாம்


கடம்பத்துார்: ஜன. 14.


திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், இரு தினங்களாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், 3,168 மனுக்கள் பெறப்பட்டன.


கடந்த மாதம், 23ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் - -2020 வெளியிடப்பட்டது.இந்த வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும்,பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும், பெயர் நீக்கம் செய்திடவும், இரு தினங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடந்தது.மணவாள நகர் அடுத்த, அதிகத்துார் பகுதியில் நேற்று நடந்த வாக்காளர்சிறப்பு முகாமை, திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, தாசில்தார் பாண்டியராஜன், தேர்தல் சிறப்பு தாசில்தார் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் ஓட்டுச்சாவடி நிலைய மேற்பார்வையாளர் பாண்டியராஜன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.