உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது இந்திய தேர்தல் ஆணையம் இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. 1950 ஜன., 25ல் தொடங்கப்பட்டது. இதன் 60 ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல் ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம்
தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, மின்னணு எந்திரம், ஒப்புகை சீட்டு, புகைப்பட அடையாள அட்டை, உடனடி தேர்தல் முடிவுகள், ஆண்டுதோறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு என
புதுமைகளை புகுத்தி வருகிறது.
ஏன் அவசியம்
பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வாக்களிப்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருடைய கடமை. அப்போது தான், மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். வாக்களிப்பது எந்தளவுக்கு அவசியமோ, அதே போல 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயரை வாக்காளராக இணைத்து கொள்வதும் அவசியம்.அடையாள அட்டையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.பெரும்பாலான தேர்தல்களில் ஓட்டுப் பதிவு 60 சதவீதத்தை தாண்டுவதில்லை. இதனால் 40 சதவீத மக்களின் விருப்பம் இல்லாமலே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்
தேர்தலில், மக்கள்தங்களது வேலைகளை ஒதுக்கி வைத்து வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும். விரல் நுனியில் விழும் கருப்பு மை, நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
குற்றம்
நாட்டில் தற்போது பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் மோசமான கலாசாரத்தை அரசியல்வாதி கள் புகுத்தியுள்ளனர். இதில் நாம் சிக்கினால், குற்றவாளிகள் தான் நம்மை ஆட்சி செய்வர். பின் எப்படி மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்; நாடு எப்படி முன்னேறும். பணத்திற்காக விலைமதிப்பற்ற வாக்குகளைவிற்காதீர்கள்.2018 ஜன., 10 கணக்கின்படிதமிழகத்தில் 5.86 கோடிவாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஆண்கள் 2.90 கோடி.பெண்கள் 2.96 கோடி.மூன்றாம் பாலினத்தவர் 5,197.