ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவினர் அமைச்சர் காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 100 பேர், அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமான ரேஷனில் வழங்கப்படும் அரிசியை கடத்துவது மிகப்பெரிய குற்றம் என்றார்.