நாமக்கல்: ஜன. 14.
பள்ளிபாளையம், அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்தா பிரிவு செயல்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சித்தா பிரிவுக்கு செல்கின்றனர். இதன் அருகில், காலியாக உள்ள இடம் முட்புதர் வளர்ந்து காணப்பட்டது. தற்போது, இந்த இடத்தை சுத்தம் செய்து, மூலிகை செடிகள் வைத்து தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மூலிகை தோட்டத்தை, தினமும் ஏராளமான மக்கள் பார்வையிடுகின்றனர். இது குறித்து, பள்ளிபாளையம் அரசு சித்தா மருத்துவர் முரளிகுமார் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விரிவுப்படுத்தப்பட்டு கருந்துளசி, ஆடாதொடா, அமுக்கரா, நன்னாரி, வெட்டிவேர், கற்பூரவள்ளி உள்பட பல வகையான மூலிகை செடிகள் வைக்கப்பட்டு, தினமும் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.