கேரளாவின் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கல்பேட்டா பகுதியில் ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி நடத்தினர். 'Save the Constitution' என்ற தலைப்பில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், நாதுராம் கோட்சே மற்றும் நரேந்திர மோடி இருவரும் ஒரே மாதிரியாக கொள்கை கொண்டவர்கள். கோட்சேவின் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என சொல்லிக் கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை. அது ஒன்றை தவிர மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.