ரஜினியை இயக்குவது, ஆலோசனை தருவது எல்லாமே பாஜக தான்.. கார்த்தி சிதம்பரம்...

புதுக்கோட்டை: ரஜினிகாந்த் பேசுவைதை எல்லாம் பார்த்தால் அவரை இயக்குவது, அவருக்கு ஆலோசனை கொடுப்பது பாஜக தான் என சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


     


      ரஜினி காந்த் துக்ளக் விழாவில் 1971ம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் விமர்சனம் செய்தும் வருகின்றன.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரத்திடம் நடிகர் ரஜினி குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், பொது வாழ்க்கைக்கு வருவதாகவும் கூறுவதெல்லாம் அவரது ஜனநாயக உரிமைதான் என்றார்.


      ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பினால் தற்போது மக்கள் முன் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், ஜிஎஸ்டி, பாபர் மசூதி இடிப்பு குறித்த தீர்ப்பு போன்றவற்றுக்கெல்லாம் கருத்து சொல்லிருக்க வேண்டும். ஆனால் 50 ஆண்டுகளுக்கும் முந்தையை சம்பவத்தை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்துவது தனக்கு பொருத்தமாக தெரியவில்லை என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார்.சரித்திர புகழ் மிக்க தலைவர்களை முழுமையாக பார்க்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம். அவர்களது ஓரிரு சம்பங்களை எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்வது தவறு.என்று கூறினார். ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கூட்டம், அவரது பேச்சு எல்லாவற்றையும் பார்த்தால் அவருக்கு ஆலோசனை கூறுவது, அவரை இயக்குவது எல்லாமே பாஜகதான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.