விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
வேடசந்துார்:வேடசந்துார் புங்கம்பாடியில், மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஆதி திராவிட விவசாயிகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடந்தது.விவசாய உற்பத்தி மற்றும் கூடுதல் வருமானம் பெறும் வழிவகை ஏற்படுத்த, வேடசந்துார் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் பயிற்சி நடந்தது. முதன்மை விஞ்ஞானி குமரேசன் தலைமை வகித்தார். விஞ்ஞானி வெங்கடேசன், தொழில் நுட்ப அலுவலர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர்.தோட்டக்கலை உதவி இயக்குநர் அலெக்சாண்டர், 'புகையிலை, செடிமுருங்கை, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களின் உழவியல் தொழில் நுட்பம் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு' குறித்து விளக்கினார். விவசாயிகள் தங்கவேலு, துரைக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.