அரியூர் நாராயணி தங்ககோவிலில் 10008 பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நிகழ்ச்சி.

     அரியூர் நாராயணி தங்ககோவிலில் 10008 பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கலந்துகொண்டு வேட்டி சேலைகளை வழங்கினார்


                  வேலூர்மாவட்டம்,அரியூர் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் 10008 பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் விழா நடைபெற்றது இதனை அரியூர் தங்ககோவில் நிறுவனர் சக்தி அம்மா கலந்துகொண்டு விளக்கேற்றி துவங்கி வைத்தார் இவ்விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்திற்கு வரலாற்று பெருமை சேர்க்கும் விதமாக இக்கோவில் அமைந்துள்ளதாகவும் நாளுக்கு நாள் அதிக அளவில் அயல்நாட்டு பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வதாகவும் பேசினார் பின்னர் விழாவில் 10008 பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் வேட்டிகளையும் சேலைகளையும் அமைச்சர் சோம் பிரகாஷ் வழங்கினார் இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..