11 மாத குழந்தைக்கு ரூ7 கோடி பரிசு... அதிஷ்டம்னா அது இப்படி அடிக்கனும்...

      கேரளாவைச் சேர்ந்த 11 மாத குழந்தையின் பெயரில் வாங்கப்பட்ட லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது.ஐக்கிய எமிரோட்டில் மாதாந்திர லாட்டரிசீட்டு நடத்தப்படுகிறது. இதைக் கேரளாவைச் சேர்ந்த ரமீஸ் ரஹ்மான் என்பவர் தன்னுடைய 11 மாத குழந்தையின் பெயரில் வாங்கினார். இந்த லாட்டரி சீட்டின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சீட்டிற்கு ரமீஸ் ரஹ்மான் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ7 கோடியே 12 லட்சம் விழுந்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.வரும் 13ம் தேதிதான் ரமீஸ் ரஹ்மானின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். முழுதாக ஒரு வயது கூட ஆகாத மகனுக்கு அடித்த அதிட்டத்தை நினைத்து அவரது பெற்றோர்கள் பெரும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளனர்.