அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இந்தியாவுக்கு வருகை தந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்தடைந்தார் அதிபர் டிரம்ப். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் .பிரதமர் மோடியும், டொனால்டு டிரமப்பும் மேடைக்கு வந்தனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது.பிரதமர் மோடி பேசி வருகிறார்.