தென்னம்புலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளில்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாஅவர்களின் 51வது நினைவு நாளில் அண்ணா அவர்களின் திருஉருவச்சிலைக்கு அ.தி.மு.க வினர்மாலை, அணிவித்து மரியாதை செய்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழ தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார் .இதில் ஓன்றிய குழுத்தலைவர் கமலா அன்பழகன், துணைத்தலைவர் அறிவழகன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவி சந்திரன் உள்ளிட்ட ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஒன்றிய. நகர, ஊராட்சி,மற்றும் கிளை | கழக ,நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.