சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்ற 6-பேர் மீது வழக்கு






சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் சரக்குகளை வாங்கி சிலர் வெளியில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். இவர்கள் மீது அவ்வப்போது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பத்தூரில் உள்ள மின்நகர் என்ற இடத்தில் மது விலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அங்கு வீரையா (55) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதே போல் காரைக்குடியில் மதுவிற்ற பாண்டித்துரை (23) என்பவரையும், முள்ளிக்குண்டு என்ற இடத்தில் மதுவிற்ற குழந்தைராஜ் (57) என்பவரையும், காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டினத்தில் மதுவிற்ற பார்த்திபன் (28) என்பவரையும், இளையாங்குடி அருகே கோட்டையூரில் மதுவிற்ற அழகு (68) என்பவரையும், மானாமதுரை அருகே முத்தனேந்தல் என்ற ஊரில் மதுவிற்ற அய்யனார் (48) என்பவரையும் போலீசார் சோதனை செய்து அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட 6 நபர்களிடம் போலீசார் 92 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது இப்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.