அதிமுகஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலிதாவின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமாகிய .தச்சை கணேசராஜா தலைமையில் நேற்று காலை 8.00 மணிக்கு முருகன் குறிச்சி பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தச்சநல்லூர் பகுதி 4வது வார்டில் 'முத்துராம் தியேட்டர் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு கொக்கிரகுளம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் திருவுருவ சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை 10.30 மணிக்கு வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கழக கொடி ஏற்றி 150 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. காலை 10.45 மணிக்கு பாளை பகுதி கழகத்தின் சார்பில் மார்க்கெட் ரோகிணி டீ ஸ்டால் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு பாளை அரசு பொது மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட அம்மா பேரவை யின் சார்பில் மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 11.30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் வேன் ஸ்டாண்ட் அருகில் கழக அமைப்புச் செயலாளர் சுதா. பரமசிவம் ஏற்பாட்டில் பொதுமக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.பகல் 12 மணிக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஏற்பாட்டில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் வைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 12.30 மணிக்கு 42 வது வட்ட கழகத்தின் சார்பில் வாகையடி முனையில் மாணவர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து வழங்கும் நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணிக்கு செங்கோட்டை நகரத்தில் நகர கழகத்தின் சார்பில் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்பிற்பகல் 3 மணிக்கு கடையநல்லூர் அரசு பொது மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு நகர கழகத்தின் சார்பில் மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியு
ம்,பின்னர் நண்பகல் 1மணிக்கு மானூர் யூனியன் முன்னாள் சேர்மன்
கல்லூர் வேலாயுதம் ஏற்பாட்டின் பேரில்
பாளை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.வீ.கருப்பசாமி பாண்டியன்,முத்துக்கருப்பன் எம்.பி,திருநெல்வேலி மாநகர மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா,மாநகர மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம்,ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு,துணை செயலாளர் கணபதி சுந்தரம்,அண்ணாதொழிற்சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி பாண்டியன்,பொருளாளர் வி.சி.வேல்பாண்டியன்,முன்னாள் மாவட்டசெயலாளர்கள் செந்தில் ஆறுமுகம்,பாப்புலர் முத்தையா,முன்னாள் மேயர் புவனேஸ்வரி,முன்னாள் துணை மேயர்ஜெகந்நாதன்(எ)கணேசன்,பகுதிசெயலாளர்கள்மோகன்,ஜெனி,ஹயாத்,மாதவன்,மா
மாரியம்மாள்,திவ்யா யாதவ்,கரையிருப்பு தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.பி.ஆதித்தன்,டால் சரவணன்,கங்கை முருகன்,முத்து சரவணன்,கே.டி.சி.பகவதிமுருகன்,செல்வகணேஷ்,எஸ்.கே.எம்.சிவக்குமார்வெண்ணிலாஜீவபாரதி,சின்னபாண்டி,திருத்துசின்னத்துரை,அசன்ஜாபர்அலி,மைதீன்கம்பர்,
தங்கபிச்சையா
உட்பட பலர் பங்கேற்றனர்