செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சி கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் ஊராட்சி கழக செயலாளரும் மேல் ஏரிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சல்குரு தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் PV களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் உமாபதி முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா திருக்கழுக்குன்றம் ஓ. செ விஜயரங்கன் முன்னாள் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் இந்த பிறந்தநாள் விழாவில் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் அபிஷேகமும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள 100 அடி உயர கொடிக்கம்பம் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு இலவச வேட்டி சேலை மற்றும் அன்னதானம் கொடுக்கபட்டது மேலும் வேத நாராயணபுரம் பீடி நகரில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் சம்பத், வா உ சி நகர் வழக்கறிஞர் CK.பெருமாள் வா உ சி நகர் கிளை கழக செயலாளர் ரவிக்குமார், கேகே நகர் கிளை கழக செயலாளர் வேலு, மகளிரணி மார்கரெட்மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.