சின்னசேலம் ஈ சி ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி விழா, அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்பு!

       


     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் அமைந்துள்ள ஈசிஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் மற்றும் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மகாபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் மோகன், ஈசிஆர் இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் பார்வதி, செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  பள்ளி முதல்வர் பாலதண்டாயுதபாணி அனைவரையும் வரவேற்றார். இந்த அறிவியல் கண்காட்சியில் மறைந்த ஜனாதிபதி அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.ஈசிஆர் பள்ளி மாணவர்கள் சொந்த எண்ணங்களில் உருவாக்கிய கலைப் பொருட்கள், மற்றும் நவீன அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.இந்த கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், தமிழர்களின் பெருமையை உணர்த்தும் பழங்கால விவசாய கருவிகள், இசையை போற்றும் வகையில் பழங்கால இசைக்கருவிகள், நம் முன்னோர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள், பாரம்பரிய 8 மாநில நெல் வகைகள், அரிசிகள், விதைகள், கடல்வாழ் உயிரினவகைகள், தமிழர்களின் விளையாட்டு பொருட்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள், எழுத்தாணி, மற்றும் பேனா வகைகள், பீங்கான் பண்டங்கள், உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் விருத்தாசலத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரின் நாணய கண்காட்சியும், பண்ருட்டியை சேர்ந்த கவிதை கணேசன் என்பவரின் நெல் மற்றும் பழங்கால சேகரிப்பு பொருள் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் ,சக்தி மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவசங்கரன் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள், மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.