சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.02.2020) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.க.லதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்; மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்று மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை செய்ததுடன், மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து உரிய நலத்திட்டங்களை ஒருவாரகாலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
பின்னர், பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாணும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கியதுடன் மேலும் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 186 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டதுடன் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மனுவிற்கும் ஒருமாதகாலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.க.லதா அவர்கள் உத்தரவிட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.25,000ஃ-க்கான காசோலையினையும், 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக தலா ரூ.17,000ஃ-க்கான காசோலைகளையும், 1 பயனாளிக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் என 5 பயனாளிகளுக்கு ரூ.1.76 இலட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில்; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.திரு.வடிவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் (பொ) திரு.காளிமுத்தன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.செல்வகுமாரி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், உதவி இயக்குநர் (கலால்) திருமதி.சிந்து மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.