வேட்டவலம் பிப்.13
வேட்டவலம் நகர தேமுதிக சார்பில் கட்சியின் இருபதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பால் ஸ்டோர் பஸ் நிறுத்தம் அருகிலும் காந்தி சிலை அருகிலும் கொடியேற்று விழா நடந்தது விழாவிற்கு நகர தேமுதிக செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
நகரத் துணைச் செயலாளர் பலராமன் மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் வார்டு செயலாளர்கள் ஆரோக்கியராஜ், வெடிமூர்த்தி, சிவானந்தம், கேப்டன் மன்ற செயலாளர் வெங்கடேசன் துணைச்செயலாளர் மூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர் அக்பர் மாவட்ட பிரதிநிதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது.