மின்னொளி கபடி போட்டி.அமைச்சர் தகவல்.
தென்காசி மாவட்டம்.

             

                முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டி

சங்கரன் கோவிலில் மார்ச் 7,8 ஆகிய தேதிகளில் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ள்ளது.இது குறித்து அமைச்சர் கூறுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை (பிப். 24 )அரசு

மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்

தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தல், திருவேங்கடம் சாலையில் உள்ள பரக்கத் மகாலில் 5,000 பேருக்கு சிறப்பு அன்னதானம்,கட்சியின் மூத்த முன்னோடிகளைக் கௌரவப்படுத்துதல்,

அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றுதல் ஆகிய

நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி சங்கரன்கோவில் டிடிடிஏ

வளாகத்தில் உள்ள பரி.பவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்-மாணவிகளுக்கு உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.மார்ச் 7, 8 ஆகிய 2 நாள்கள் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவிலான மின்னொளி கபடிப்

போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள்

வழங்கப்படும் என தெரிவித்தார்.