கடல்நீரின் தரம் மேம்பட்டுள்ளதா? ஆய்வு குழு அமைத்து உத்தரவு!


சென்னை: 'கடல்நீரின் தரம் உயர்ந்துள்ளதா; எந்த மாதிரியான நடவடிக்கைகளால், கடல்நீரின் தரத்தை மேம்படுத்த முடியும்' என, ஆய்வு செய்ய குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.உரிய நடவடிக்கைசென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் தியாகராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனு:மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், தமிழக பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலந்தனர்.இதனால், கடல்வளம் பாதிக்கப்பட்டது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, அண்ணா பல்கலை கெமிக்கல் நிபுணத்துவம் பெற்ற மூத்த விஞ்ஞானி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.இந்த குழு, மணலி பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம், தமிழக பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் ஆகியவை, மாசுவை கட்டுப்படுத்த தேவையான வசதிகள் மேற்கொண்டுள்ளனவா, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளின்படி கழிவுகள் வெளியேறுகிறதா போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல்மேலும், கடல்நீரின் தரம் மேம்பட்டுள்ளதா, அவ்வாறு இல்லாத பட்சத்தில், என்னென்ன தீர்வுகள் வாயிலாக, கடல்நீரின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.