பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு சிம் கார்டுகளை வழங்கியதற்காக சென்னையில் உள்ள முக்கிய தொலைதொடர்பு சேவை வழங்கும் சிலரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகின்றன.
சேலத்தில் முகமது புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இனறு காலை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.முகமது புராவில் உள்ள அப்துல் ரஹ்மான் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர், இவர் சமீபத்தில் மொபைல் சிம் கார்டுகள் வாங்க ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தொடர்புள்ளவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் உள்ள அப்துல் ரஹ்மானின் மொபைல் போன் கடையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.அதுபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கயல்பட்டினத்தில் உள்ள மொஹிதீன் பாத்திமாவின் வீட்டில் ஒரு தேசிய புலனாய்வு குழு சோதனையில் ஈடுபட்டு உள்ளது.
எஸ்.ஐ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ஷமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் ஜனவரி 8 இரவு காளியக்காவிலை சோதனைச் சாவடியில் காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவரது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்ததால், சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக வருவதாக உள்ளூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கொண்ட தேசிய புலனாய்வு குழு இந்த சோதனையை நடத்துகிறது சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.