திருக்கோவிலூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் செயல்பட்டதுதிருக்கோவிலூர் பிப்-04 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்து அரகண்டநல்லூரில் இயங்கிவரும் அரசு ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக நெல் மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு அரசு வழங்கும் தொகை மிகக் குறைவாக உள்ளது. எனவே தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்ததால் அப்பகுதி விவசாய பொதுமக்கள் நெல் அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான பொன்முடி அவர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அங்கு உள்ள அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக கமிட்டி செயல்பட தக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு செயல்பட்டது.