கொரோனா கப்பலில் இந்தியர்கள்....

             


                   கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2 வாரத்திற்கும் மேலாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இந்தியர்கள் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


                  ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து சீனா புறப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 3700 பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பயணித்தனர். ஆனால் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதும், அதுனால் மக்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருவதால் இந்த பயணிகள் கப்பல் நடுக்கடலில் 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 6 பயணிகளும், ஏராளமான பணியாளர்களும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.


                 இந்த கப்பலில் இருப்பவர்களில் ஏற்கனவே 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருக்கும் இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 61 பேரில் இந்தியர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்த தகவலை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உறுதி செய்துள்ளனர்.