ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியது பிரிட்டன்.....

                 



                                  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து கடந்த 2016 ல் பொது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் ஓட்டு போட்டனர். இதன் பின்னர் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால், அரசியல் மாற்றங்களும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியில் இருந்து விலகினர்.


                                 இதன் பின்னர் பிரதமரான போரிஸ் ஜான்சன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகினாலும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள 11 மாதங்கள் ஆகும். டிச.,31ம் தேதி முதல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுமையாக விலகிவிடும். இதனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள 73 பிரிட்டன் எம்.பி.,க்கள் தங்களது பதவியை இழப்பார்கள். பிரிட்டன் விலகியதற்க, ஸ்காட்லாந்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியது நாட்டின் வரலாற்றில் முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறியுள்ளார்.