சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 31 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமின்றி 3,922 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று 28 ரூபாய் குறைந்து 3,894 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 31 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 224 ரூபாய் குறைந்து, 31 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் குறைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.