விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை அடுத்த மணக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பல மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் மிகவும் அதிகமாக உள்ளது. மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே வரவே பயப்படும் சூழல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு தேர்வுக்கான தேர்வு மையமாக எங்கள் பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. இன்னும் தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நாளுக்கு நாள் எங்கள் பள்ளியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஏற்கனவே வனத்துறையில் எங்கள் பள்ளி சார்பில் இது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம்.அவர்களின் நடவடிக்கைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.மாணவர்களின் கல்வி நலன் கருதி, துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பள்ளியின் சார்பில் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குரங்கின் அட்டகாசம் தான் பள்ளி மாணவர்கள் அவதி